இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நிராகரித்து வந்தநிலையில், நிலைமை மோசமடையும் பட்சத்தில் தற்போது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் கடந்த ஒரு வருடமாக ஏற்பட்டுள்ள டாலர் பிரச்சனை காரணமாக நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
ஆனாலும் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்கும் போது நிபந்தனைகளை விதிக்கும் என்ற விடயம் வெகுவாக பேசப்படுகிறது.