போக்கோ நிறுவனம் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சமீபத்தில் நிறுவனம் Poco M4 Pro 5ஜி மாடலை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அதன் அடிப்படை மாடலை இந்தியாவுக்குக் கொண்டுவர உள்ளது.
மீடியாடெக் டிமென்சிட்டி 700 சிப்செட், இரண்டு லென்ஸ் கொண்ட பின்புற கேமரா அமைப்பு, 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே ஆகிய அம்சங்களுடன் இந்த போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் டெக் சந்தையில் வலம்வர உள்ளது.
போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் அம்சங்கள்
ஆண்ட்ராய்டு 11 இயங்குதள அடிப்படையிலான MIUI 12.5 ஸ்கின் உதவியுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.
Poco M4 5G
ஸ்மார்ட்போன் 6.58″ அங்குல முழு அளவு எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வருகிறது. இந்த டிஸ்ப்ளே, 90Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 180Hz ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் ஆதரவை பெற்றுள்ளது.
போக்கோ எம்4 5ஜி செயல்திறனை பொருத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 700 5ஜி சிப்செட் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாலி கிராபிக்ஸ் எஞ்சின் இந்த சிப்செட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது. UFS2.2 மெமரி ஆதரவும் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 4ஜிபி, 6ஜிபி ஆகிய இரு ரேம் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா
வீடியோ அழைப்புகள், செல்பி மற்றும் முகத்தை கொண்டு போனை திறக்க 5MP மெகாபிக்சல் கேமராவை முன்பக்கத்தில் போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முதன்மை சென்சாராக 50 மெகாபிக்சல் கேமராவும், கூடுதலாக 2MP மெகாபிக்சல் டெப்த் சென்சாரும் நிறுவப்பட்டுள்ளது.
Poco-M4-5G விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்Qualcomm Snapdragon 730டிஸ்பிளே6.67 inches (16.94 cm)சேமிப்பகம்128 GBகேமரா48 MP + 8 MP + 5 MP + 2 MPபேட்டரி5000 mAhஇந்திய விலை29184ரேம்6 GBமுழு அம்சங்கள்