முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், புதிய சோஷியல் மீடியாவைத் தொடங்கினார். அதிபராக இருந்த சமயத்தில்
ட்விட்டர்
இவரது பதிவுகளுக்கு தடை விதித்த விரக்தியில், தனது புதிய Truth Social ஆப் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
சில மாதங்களுக்கு முன் ட்ரூத் சோஷியல் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ட்ரம்ப் வெளியிட்டார். வெளியிட்ட சில நாள்களில் இந்த செயலியை பெரும்பாலான மக்கள் பதிவிறக்கம் செய்தனர். இந்த சூழலில், டிரம்பின் ட்ரூத் சோஷியல் ஆப் குறித்து டெஸ்லா நிறுவனர்
எலான் மஸ்க்
ட்வீட் செய்துள்ளார்.
கண்ண மூடிட்டு வாங்கலாம் – மிரட்டும் அம்சங்களுடன் வெளியான மோட்டோ ஜி52!
ட்ரூத் சோஷியல் முதலிடம்
அவரது ட்விட்டர் பதிவில், ட்ரூத் சோஷியல் செயலியானது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது டிக்டாக், ட்விட்டரை பின்னுக்கு தள்ளி டிரம்பின் செயலி முன்னணியில் இருக்கிறது. வெறும் ஒரு வாரத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தை வாங்குவதற்கு முன்பு வரை, ட்ரூத் சோஷியல் ஆப் 52 ஆவது இடத்தில் தான் இருந்தது. இதே நேரத்தில் ட்விட்டர் செயலியானது பதிவிறக்கங்களின் அட்டவணையில் 39 ஆவது இடத்தில் இருந்தது. ட்ரூத் சோஷியலின் பதிவிறக்கங்கள் ஏப்ரல் 18 முதல் 25 வரையிலான காலத்தில் மட்டும் 75,000 ஆக உயர்ந்துள்ளது.
வாய்ப்பில்ல ராஜா
இது ஃபோர்ப்ஸ் வெளியிட்ட மொபைல் ஆப் மெட்ரிக்ஸ் மானிட்டர் சென்சார் டவர் தரவுகளின்படி, ஒரு வாரத்திற்கு முன்பு பதிவுசெய்யப்பட்ட பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை விட 150% விழுக்காடு அதிகமாகும் என்று தெரியவந்துள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு தான், டிரம்பின் செயலி ஆப் ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க் ட்வீட்டுக்கு ட்ரம்ப் பதிலளித்துள்ளார். அதில், “ட்ரூத் சோஷியல் மக்களிடத்தின் வேகமாக சென்றடைந்துள்ளது. இதனை ட்விட்டரின் புதிய தலைவரே ஒப்புக் கொண்டுள்ளார். இனி எக்காரணம் கொண்டும் ட்விட்டர் பக்கத்தில் கணக்கைத் தொடங்கும் எண்ணம் எனக்கில்லை. ட்விட்டர் என் பழைய கணக்கை மீட்டுத் தந்தாலும், நான் அதனை தொடர்ந்து பயன்படுத்த தயாராக இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிக்னல், டெலிகிராம், வாட்ஸ்அப் – இதில் எந்த மெசஞ்சர் பாதுகாப்பானது?
Truth Social ஆப் பயன்பாடு எவ்வாறு செயல்படுகிறது?
உங்கள் நண்பர்கள், வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதற்காக, புகைப்படம், செய்தி அல்லது வீடியோ இணைப்பை இடுகையை பதிவு செய்வதற்கும், உரையாடலில் சேரவும், உங்கள் தனிப்பட்ட கருத்தைப் பகிர்ந்து கொள்ளவும் ட்ரூத் சோஷியல் ஆப் வழிவகுக்கிறது.
சுயவிவரம், அவதார் மற்றும் பின்னணி படங்களை அமைத்து பயனர்கள் தங்கள் எண்ணோட்டங்களை வெளிப்படுத்தலாம். அவர்கள் ஆர்வமுள்ள நபர்கள், நிறுவனங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் இருந்து சமீபத்திய தகவல்களை பெறலாம்.