அறந்தாங்கியில் அங்கன்வாடி கட்டடத்தின் சிறிய இடைவெளியில் சிக்கிக்கொண்ட கோயில் காளையை தீயணைப்பு வீரர்கள் கட்டடத்தை இடித்து பத்திரமாக மீட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அருகேயுள்ள அங்கன்வாடி பள்ளி கட்டடத்தின் பின்புறம் மிகச்சிறிய சந்து ஒன்று உள்ளது. அந்த சந்துவழியாகச் சென்ற கோயில் காளை ஒன்று திரும்பவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் சிக்கித் தவித்திருக்கிறது. அதைப் பார்த்த உள்ளூர் மக்கள் நகராட்சி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
நகராட்சி அலுவலர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மாட்டின் கொம்பில் கயிற்றை கட்டி இழுத்து பார்த்திருக்கின்றனர்.
ஆனால் வெளியே இழுக்க முடியவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி மாடு நின்ற இடத்திலிருந்த பள்ளி கட்டட ஜன்னலை சுவருடன் சேர்த்து இடித்து மாட்டை பள்ளியின் உள்பக்கத்திலிருந்து மீட்க முடிவு செய்தனர். அதன்படி பள்ளி ஜன்னலையும் சுவரையும் கவனமாக இடித்த தீயணைப்பு வீரர்கள் மாட்டை பத்திரமாக மீட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM