அசாமில் இரட்டை எஞ்சின்கொண்ட வளர்ச்சி நோக்கிலான அரசு செயல்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அசாமின் திபு என்னுமிடத்தில் பேரணிக்குச் சென்ற பிரதமர் மோடியை அப்பகுதி மக்கள் வரவேற்றனர்.
அவர்களுக்குப் பிரதமர் மோடி கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
ஒரு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரு கலை அறிவியல் கல்லூரி, ஒரு வேளாண்மைக்கல்லூரி ஆகியவற்றுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அசாமின் 23 மாவட்டங்களிலும், வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் மேடையை விட்டுச் சென்ற பிரதமருக்கு அரங்கில் உள்ளவர்கள் சால்வை அணிவித்தனர். பிரதமர் கைகுலுக்கி அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.