வழமைக்கு மாறாக உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று அபேக்ஷா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை என்பது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையாகும். இதனை உணர்வுபூர்வமாக பயன்படுத்தி, சிலர் நிதி திரட்டல் போன்ற முறைகேடுகளிலும் ஈடுபடலாம் .
மருந்து வகைகள் இன்றி, அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் சிறுவர்கள் உயிரிழப்பதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
வழமையாக இடம்பெறும் மரண வீதங்களே தற்சமயம் பதிவாவதாகவும், இது மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்டது அல்ல என்றும் அவர் கூறினார். போதியளவிலான மருந்து இல்லாவிட்டால், வைத்தியசாலையில் வழமையை விட கூடுதலான மரணங்கள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மருந்து வகைகள் இன்றிஇ அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் சிறுவர்கள் உயிரிழப்பதாக வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் விஜித் குணசேகர தெரிவித்துள்ளார். வழமையான முறையில் இடம்பெறும் மரண வீதங்களே தற்சமயம் பதிவு செய்யப்படுவதாகவும்இ இது மருந்து தட்டுப்பாட்டினால் ஏற்பட்டது அல்ல என்றும் அவர் கூறினார். போதியளவிலான மருந்து இல்லாவிட்டால்இ வைத்தியசாலையில் வழமையை விட கூடுதலான மரணங்கள் நிகழ வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை என்பது புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெறும் வைத்தியசாலையாகும். இதனை உணர்வுபூர்வமாக பயன்படுத்திஇ சிலர் நிதி திரட்டல் போன்ற முறைகேடுகளிலும் ஈடுபடலாம் என்று அவர் கூறினார்.