சிவகார்த்திகேயன்
ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு மத்தியில் வெளியான படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா அச்சுறுத்தலை எல்லாம் மீறி இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின்
டான்
,
அயலான்
படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர்
ரவிக்குமார்
இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் வித்தியாசமான கதைகளத்தோடு சினிமாவிற்கு வந்தவர் ரவிக்குமார். இவரின் அடுத்த படைப்பாக கடந்த இரண்டு ஆண்டாக ‘அயலான்’ படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ‘அயலான்’ படப்பிடிப்பு பணிகள் மற்றும் டப்பிங் வேலைகள் மீண்டும் துவங்கப்பட்டது. இந்தப்படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.
தடபுடலாக தயாரான மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி: திடீரென விசேஷத்தை நிறுத்திய ஷங்கர்.!
இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன், சயின்ஸ் ஃபிக்சன் மற்றும் கிராபிக்ஸ் படமாக ‘அயலான்’ இருக்கும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு இந்தப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்திசிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அயலான்’ படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘டான்’ படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
“காத்துவாக்குல ரெண்டு காதல்” படம் எப்படி இருக்கு?