வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: ‛இம்ரான் கான், தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கடைசி நிமிடம் வரை போராடினார், அதற்காக ராணுவத்திடம் உதவி கேட்டு இம்ரான் கெஞ்சினார்’ என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் தெரிவித்துள்ளார்.
பாக்.,கில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகினார். தற்போது, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். இந்த நிலையில், லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாக்., முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மர்யம் நவாஸ் பங்கேற்றார்.
அப்போது மர்யம் நவாஸ் பேசியதாவது: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள கடைசி நிமிடம் வரை போராடினார். பதவியில் தொடர்வதற்காக ராணுவத்திடம் உதவி கேட்டு இம்ரான் கெஞ்சினார். ஆனால் ராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தன்போது தன்னைக் காப்பாற்ற பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரியிடமும் இம்ரான் கான் கெஞ்சினார். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement