ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:
ஆளுநர் பதவியால் மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவ் பதவி இழந்தார். பின்னர் மீண்டும் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். அப்படிப்பட்ட என்.டி.ராமாராவுக்கே ஆளுநர் பதவி சினிமா காட்டி விட்டது. ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிராவில் மாநில முதல்வர் 12 எம்எல்சிக்களை ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனை மாநில ஆளுநர் கண்டுகொள்ளாமல் உள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களிலும் இதுபோன்ற பஞ்சாயத்துகளே நடக்கின்றன. நாட்டில் புதிய அரசியல் சக்தி உருவாக வேண்டும். இதற்கு டிஆர்எஸ் உறுதுணையாக இருக்கும். நாட்டின் அரசியல் சூழல் மீது கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்த வேண்டும். தேசப்பிதா காந்தியை சுட்டுக் கொன்றவனை வழிபடுவது கொடுமையிலும் கொடுமை. மத அரசியல் நடத்தி நாட்டை எவ்வழியில் அழைத்து செல்கிறார்களோ எனும் அச்சம் ஏற்படுகிறது.
இவ்வாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசினார்.