இவர் இப்படி டென்ஷனாகி பார்த்ததே இல்லை: அதிரவைத்த முரளிதரன்

muttiah muralitharan tamil news: இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரராக வலம் வருபவர் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கடந்த 1992ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளும் (133 டெஸ்ட்), ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகளும் (350 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். மேலும் இந்த இரண்டு பார்மெட்டிலும் அதிக விக்கெட்களை கைப்பற்றி உலக சாதனை படைத்த வீரரும் இவர் தான்.

முத்தையா முரளிதரன், அவர் விளையாடிய காலத்தில் பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ப சொப்பனமாக திகழ்ந்தவர் என்று கூறினால் மிகையாகாது. அவ்வளவு துல்லியமாக பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பார். இவரின் சூழலில் சிக்காத வீரர்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு அனைவரையும் கதிகலங்க வைத்தவர்.

பந்துவீச்சில் மிரட்டி சிங்கமாக கர்ஜித்த முரளிதரன், ஆடுகளத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அமைதிக்கு “பெயர்போனவர்” என்று சொல்லும் அளவிற்கு காணப்பட்டார். அவரின் பெயரை குறிப்பிடும்போது அந்த புன்னகை தவழ்ந்த முகமே அனைவருக்கும் நினைவு வரும். எதிரிகளிடமும் அன்பு பாராட்டுபவராகவே இருப்பவர் அவர். உதாரணமாக ஒரு டெஸ்ட் போட்டியில் பந்து வீசும் போது, நடுவர் அவர் வீசிய பந்தை நோ பால் என அறிவித்து, பவுலிங் ஆக்சன் சரியில்லை என்று நிராகரித்தார். அப்போது அவர் தனது அக்மார்க் சிரிப்பையே வெளிப்படுத்தினார். அவ்வளவு ஏன் நிறவெறி காரணமாக ஆஸ்திரேலியாவில் முரளிதரன் மீது முட்டை வீசப்பட்டபோதும் கூட அவர் தனது கோப முகத்தை காட்டவில்லை.

cricket news in tamil: muttiah muralitharan talks about virender sehwag

இப்படியொரு நிலையில் தான், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தனது கோபத்தை வெளிப்படுத்திய வீடியோ வெளியாகி இருக்கிறது.

முத்தையா முரளிதரன் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். நடப்பு தொடரில் தொடக்க லீக் ஆட்டங்களில் சொதப்பிய ஐதராபாத் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பதிவு செய்து கம்பீரமாக நடைபோட்டது. இந்த நிலையில், நேற்று அந்த அணி குஜராத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்த தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மற்றும் மிடில் -ஆடரில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய எய்டன் மார்க்ரம் அரைசதம் விளாசினார்.

196 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய குஜராத் அணி உம்ரன் மாலிக் வேகத்தில் சிக்கி அவரிடம் மட்டுமே 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்தது. ஆனால், களத்தில் இருந்த ரஷித் கான் மற்றும் ராகுல் தெவாடியா ஜோடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 31 மற்றும் 40 ரன்களுடன் சன்ரைசர்ஸை தோற்கடித்தது மட்டுமல்லாமல், உம்ரான் மாலிக்கின் (5/25 ) சிறப்பான பந்துவீச்சிற்கான மதிப்பை இழக்க செய்தனர்.

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய மார்கோ ஜான்சன் 4 சிக்சர்களை வாரிக்கொடுக்க குஜராத் த்ரில் வெற்றியை ருசித்தது. மார்கோ ஜான்சன் இப்படி ரன்களை வாரிக்கொடுத்தததை டக் அவுட்டில் இருந்து கவனித்து வந்த முரளிதரன், திடீரென படு டென்சன் ஆகிவிட்டார். தனது சேரில் இருந்து கோபமாக எழுந்த அவர் சத்தமாக கத்திவிட்டு அமர்ந்தார். அவர் அப்படி கோபத்துடன் கத்திய வார்த்தை கெட்ட வார்த்தையாகத்தான் இருக்கும் என்று பலர் கூறுகின்றனர்.

முரளிதரன் இப்படி கோபமாக கத்தியதை கண்ட சக அணி நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்தனர். இதைபார்த்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும், தங்கள் வாழ்வில் முரளிதரன் இப்படி கோபப்பட்டு பார்த்தது இல்லை என்றும் தெரிவித்தனர். அவர் எழுந்து கோபத்துடன் கத்திய வீடியோ தற்போது இணைய பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டும் வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.