சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரித்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்எல் ரவி தேர்தல் வழக்கை தேர்தல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதேபோல், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் ஆர்.பிரேமலதா தாக்கல் செய்த மனுவில், “உதயநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவர் மீதான வழக்குகள் குறித்த தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது செல்லாது எனவும், அவர் தேர்தலில் தேர்தலில் அவருடைய தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் வாக்காளர் ஆர்.பிரேமலதா தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், “உதயநிதி மீது 22 வழக்குகள் குறித்த விவரங்கள் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் எதுவும் கூறப்படவில்லை” என்று தெரிவித்த நீதிபதிகள், உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்கு எதிரான இந்த வழக்கை நிராகரிக்கிறோம் நேற்று தீர்ப்பளித்தனர்.