மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின.
டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா 57 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது.
டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர் பிரத்வி ஷா டக் அவுட்டானார்.
டேவிட் வார்னர் 26 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். மார்ஷ் 13 ரன்னுக்கும், லதித் யாதவ் 22 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ரிஷப் பந்த் 2 ரன்னுடன் வெளியேறினார்.
அக்சர் படேல் 24 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். பாவெல் 16 ரன்களில் 33 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
டெல்லி அணி 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதையும் படியுங்கள்…
டிஎன்பிஎல் கிரிக்கெட் ஜூன் 23ல் ஆரம்பம்: போட்டி அட்டவணை வெளியீடு