ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி விலக வேண்டும் – ரவிசாஸ்திரி வலியுறுத்தல்

மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில்ரன் எடுக்க முடியாமல் திணறும்பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் வீரர் விராட் கோலி (9 ஆட்டத்தில் 128 ரன்) ஓய்வு எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில், 
‘விராட் கோலி இடைவிடாது தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான போட்டிக்கும்கேப்டனாக செயல்பட்டார். மனதளவில் புத்துணர்ச்சி பெற அவருக்கு ஓய்வு மிகவும் அவசியமாகும். அது தான் தற்போது சரியானதாக இருக்கும். 
நடப்பு தொடரில் ஏற்கனவே பாதி போட்டிகளில் விளையாடி விட்ட கோலி எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகவேண்டும். இதனை நான் கோலிக்காக மட்டும்சொல்லவில்லை. இந்திய அணிக்காக ஆடும் அனைவருக்கும் இந்த யோசனையை சொல்கிறேன். 
ஓராண்டில் இந்திய அணி கிரிக்கெட் விளையாடாத நாட்கள் எதுவென்றால் ஐ.பி.எல். போட்டி நடக்கும்போது மட்டும்தான். இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு வீரரும் தங்களது ஓய்வு நேரத்தை திட்டமிட்டு செயல்பட வேண்டும். சில சமயத்தில், ‘ஐ.பி.எல்.-ல் நான் பாதி போட்டிகளில் தான் நான் விளையாடுவேன். அதற்குரிய ஊதியம்தந்தால் போதும்’ என்று அணி நிர்வாகத்திடம் வீரர்கள் தைரியமாக சொல்ல வேண்டும். 
சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ஜொலிக்க சில நேரம் இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும். விராட் கோலியால் இன்னும் 5-6 ஆண்டுகள் சிறப்பாக விளையாட முடியும். அவரை போல் பல சிறந்த வீரர்கள் இது போன்ற கடினமான காலக்கட்டத்தை சந்தித்து இருக்கிறார்கள். அதனால் கோலி அது பற்றி அதிகமாக சிந்திக்காமல், போதிய ஓய்வு எடுத்து விட்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப வேண்டியது அவசியமாகும் ’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.