பட்டியல் இனத்தவர் (எஸ்சி) என போலி சான்றிதழ் கொடுத்து கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில், பட்டியல் இனத்தவர் என போலியான சான்றிதழ் கொடுத்து ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார். எஸ்சி என் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அந்த ஊழியர் கடந்த பல ஆண்டுகளாக கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்த ஊழியர் பட்டியல் இனத்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து பணியில் இதுகுறித்து தகவல் அறிந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், பட்டியல் இனத்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்து பணி புரிந்துவந்த சம்பந்தப்பட்ட அந்த ஊழியருக்கு கட்டாய ஓய்வு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது
அதுமட்டுமில்லாமல், அந்த ஊழியருக்கு 40% மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகும் துறை ரீதியான விசாரணையை நடத்த விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“