காங்கிரஸை 'கை'விட்ட பி.கே… முடிவின் பின்னணி என்ன?

நேரு, இந்திரா, ராஜிவ் காலங்களில் அசுர பலத்துடன் இருந்த
காங்கிரஸ்
அதன்பின் மெல்ல மெல்ல தேய்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இல்லாமல் போகும் அளவுக்கு மிகவும் பரிதாபகரமான நிலையி்ல் உள்ளது.

என்னதான் அரசியல்ரீதியாக காங்கிரஸ் தமது செல்வாக்கை இழந்துவிட்ட நிலையிலும், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை காங்கிரஸ் தான் எதிர்த்தாக வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் களத்தில் பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு காங்கிரஸை தயார் செய்யும் நோக்க்த்துடனே தமது மாஸ்டர் பிளான் ஐடியாவுடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை அண்மையில் சந்தித்திருந்தார் இந்திய அரசியலில் பி.கே. என்று அறியப்படும் தேர்தல் உத்தியாளர் பிரசாந்த் கிஷோர்.

காங்கிரசுக்கு புத்துயிர் அளிப்பது குறித்த அவரது ஐடியாக்களை ஆற அமர கேட்ட காங்கிரஸ் தலைமை, அவரை கட்சியில் இணையும்படி அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் காங்கிரசின் இந்த அழைப்பை பி.கே. நிராகரித்துள்ளார். காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் பிடிகொடுக்காதது ஏன்? -தமிழ் சமயம் -செய்தி ஆசிரியர் ஸ்டீஃபன் தமது பார்வையில் முன்வைத்த கருத்துகள்:

காங்கிரஸ் மீது கரிசனம்:
2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தேர்தல் உத்தி வுகுப்பாளராக செயல்பட்டுள்ள பிரசாந்த் கிஷோரின் அபாரமான ஐடியாக்கள், மோடியின் இமேஜை உயர்த்தி, அந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிப்பெற முக்கிய காரணமாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால், அதன் பிறகு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாதது, ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் என பாஜகவின் செயல்பாடுகள் பி.கே.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம். இதற்கு 2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு தக்கபாடம் புகட்ட வேண்டுமென அவர் கருதலாம். இதன் காரணமாகவே அவரின் கரிசன பார்வை காங்கிரஸ் மீது விழுந்திருக்கலாம்.

பி.கே.வின் மூன்று நிபந்தனைகள்:
காங்கிரசில் தமக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று கூறி வந்த பிரசாந்த் கிஷோர், ஆனால் கட்சியை அனைத்து நிலைகளிலும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் தான் சொல்வதை கேட்டு செயல்பட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தார்.

அத்துடன் தான் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய கட்சியின் மேல்மட்ட தலைவர்களுடன் எப்போது நேரடி தொடர்பில் இருப்பேன். இதற்கு கட்சியின் சீனியர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என்று அடுத்த நிபந்தனை விதித்த அலர், 2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு செம டஃப் கொடுக்கும் கட்சியாக காங்கிரசை உருவாக்கும் ஒற்றை நோக்கத்துடன் கட்சிியின் தொண்டர்கள் முதல் அனைத்து நிலை நிர்வாகிகளும் செயல்பட வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகளை பி.கே. விதித்தார்.

சீறும் சீனியர்கள்:
பி.கே.வின் இந்த நிபந்தனைகளை கேட்ட காங்கிரசின் சீனியர்களுக்கு அவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் நேரடியாக தொடர்பில் இருந்தால், கட்சியில் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக தெரிகிறது. மேலும் வாய்ப்புகளை தேடும் சந்தர்ப்பவாதியாக பி.கே. இருப்பதாக விமர்சித்துள்ள சீனியர் தலைவர்கள் அவரின் சித்தாந்தம்தான் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் 2024 நாடாளுமன்ற தேர்தல்தான் தமது இலக்கு என்று கூறும் அவர், அதற்கு முன்பு வரவுள்ள குஜராத், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் தமது நிலைப்பாடாடு என்ன என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

முடிவை கைவிட்ட பி.கே:
தான் மிகவும் சிரத்தை எடுத்து, கட்சியின் வளர்ச்சியாக பல்வேறு யோசனைகளை சொன்னால் அதனை முழுமையாக உள்வாங்காமல், இப்படி என்னையே கேள்வி கேட்கிறார்களே? இவர்களை வைத்து கொண்டு காங்கிரசில் என்ன மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்? என்று எண்ணினாரோ என்னவோ, காங்கிரசில் சேரும் தமது கைவிடுவதாக முடிவெடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.