சிம்புவின் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்
விக்னேஷ் சிவன்
. அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார்.
அப்படம் அவரின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 2015 ஆம் ஆண்டு தனுஷ் தயாரிப்பில்
விஜய் சேதுபதி
மற்றும்
நயன்தாரா
நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அஜித் & விஜய்யின் சம்பளம் பற்றி விஜய் சேதுபதி ஓபன் டாக்..!
அதைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.
நானும் ரவுடி தான் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா உடன் இப்படத்தில் சமந்தாவும் நடித்துள்ளார். தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.
சமந்தா
இந்நிலையில் இப்படத்தில் சமந்தாவிற்கு பதில் நடிகை த்ரிஷாவை தான் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிக்க வைக்க அணுகினாராம். ஆனால் சில காரணங்களால் த்ரிஷாவால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக
சமந்தா
நடித்திருந்தார்.
திரிஷா
இதைத்தொடர்ந்து படம் பார்த்த அனைவரும் சமந்தாவின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதியின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இப்படம் அவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிறமொழி படங்கள் தமிழகத்தில் நல்லா ஓடுறது புதுசில்ல – மணிரத்னம்