பொதுவாக காலில் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் உடலில் அதிகமாக ஏற்படும் வெப்பம் காரணமாகவும் ,அசுத்தமான இடங்களில் உள்ள கிருமிகளாலும் காலில் ஆணி பலருக்கு வருகிறது.
இந்தக்கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவையே பின்னாளில் ஆறாத அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பும் உண்டு.
எனவே இவற்றை எளியமுறையில் போக்க இதோ சில எளிய முறைகள்.
- கால் ஆணி ஏற்பட்ட இடங்களில் பூண்டை நசுக்கி அதன் சாறை தடவி வரவும். இரவுப் பொழுதில் காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- மல்லிகைச்செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பத்து போடுங்கள். இதனால் பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
- வேப்பிலையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். வேப்பிலை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி உள்ள இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும்.
- அம்மான் பச்சரிசி செடியை சிறிது சிறிதாக உடைத்து அதில் வரும் பாலை பயன்படுத்தலாம். ஒரு தடவை தடவினதும் குணம் கிதைத்து விடாது. தொடர்ந்து இரண்டு வாரமாவது செய்யுங்கள். முதலில் வலி குறையும், பிறகு போகப் போக ஆணியும் மறைந்து விடும்.
- மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள்மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
- மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து மையாக அரைக்க வேண்டும். ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு உறங்கப்போவதற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்ட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்து வர கால் ஆணி இல்லாமல் போகும்.
- சித்திரமூலம் (கொடிவேலி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து உறங்கப்போவதற்கு முன் கால் ஆணி மேல் பூசி வர. மூன்று நாட்களில் பலன் கிடைக்கும்.
- இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்.