உக்ரைனின் புச்சா நகர படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பத்து ரஷ்ய வீரர்களின் பட்டியலை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் கொடூரங்களை நிகழ்த்திய ரஷ்ய துருப்புகள், அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று புதைத்துள்ளது அம்பலமானது.
சிறார்கள், பெண்கள் என பலர் வன்கொடுமைக்கும் இரையாகினர்.
புச்சா நகர கொடூரங்கள் வெளிச்சத்துக்கு வந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, போர் குற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது.
இந்த நிலையில், இழிவான பத்து பேர் என்ற தலைப்புடன் உக்ரைன் அரசாங்கம் புகைப்படம், பெயர் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
விளாடிமிர் புடின் கட்டளைக்கு பணிந்து, புச்சா நகரில் களமிறக்கப்பட்ட வீரர்கள் இவர்கள் என உக்ரைன் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய துருப்புக்கள் புச்சாவிலிருந்து வெளியேறிய பிறகு, 410 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் சடலங்கள் மீட்கப்பட்டன, அவர்களில் பலர் கைகள் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு தூக்கிலிடப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.
மட்டுமின்றி, ரஷ்ய வீரர்கள் பயன்படுத்திய சித்திரவதை கூடங்களும், அதில் ஆண்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதும், அவர்களுடன் பெண்கள் மற்றும் சிறார்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் சடலங்கள் அனைத்தும் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, போர் குற்ற நடவடிக்கைகளுக்கான தரவுகள் திரட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, புச்சா நகர கொடூரங்களுக்கு காரணமானவர்கள் என குறிப்பிட்டு 10 பேர் பட்டியலை உக்ரைன் வெளியிட்டுள்ளது.
குறித்த வீரர்கள் இடம்பெற்றுள்ள 64வது படௌயணியானது சமீபத்தில் விளாடிமிர் புடினால் விருதளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.