கொரோனா வைரஸ் தொற்றுநோயை தொடர்ந்தும் கண்காணிக்குமாறு ,உலக சுகாதார அமைப்பின் செயலாளர் நாயகம் ,உலக நாடுகளை அறிவுறுத்தியுள்ளார்.
தற்பொழுது பரிசோதனை நடவடிக்கை குறைந்துள்ளதிளால் வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதில் உலகம் ‘பார்வையற்றவர்கள் ‘ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைப்பின் தலைமையகமான ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர மாநாட்டில் செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் Tedros Adhanom Ghebreyesus கூறுகையில், ‘உலகளவில் பல நாடுகள் கொரோனா பரிசோதனை செய்வதை குறைத்திருப்பதனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்று பற்றிய தகவல்களை குறைந்தளவிலேயே பெற்றுக்கொள்கின்றது . ‘இதனால் கொரோனாவின் புதிய திரிபு மற்றும் பரிணாம வளர்ச்சியின் வடிவங்களை கண்டுபிடிப்பதில் பார்வையற்றவர்களாக மாறியுள்ளோம் என சுறினார்.
கொவிட் தொற்றினை பரிசோதனை செய்யும் நடவடிக்கை 70 வீதம் முதல் 90 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக பைன்ட் நிறுவன பரிசோதனை தலைமை நிர்வாகி பில் ரோட்ரிக்ஸ் தெரிவித்திருந்தார்.
மேலும் ‘ எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யூகிக்கும் திறனும் நம்மிடத்தில் இல்லை. நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்வதற்காகவும் உயிரிழப்பினை தவிர்ப்பதற்காகவும் வைரஸ் குறித்து எவ்வித கவலையும் இன்றி, கண்மூடித்தனமாக இருக்கிறோம்’என்றும் அவர் கூறியுள்ளார்.
சயந்தினி கந்தசாமி