கோவை டாஸ்மாக் பாரில் மது அருந்திய தி.மு.க நிர்வாகி மரணம்: டாக்டர் ராமதாஸ் வேதனை

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் கள்ளச்சந்தையில் மது வாங்கி அருந்திய திமுக பிரமுகர் மரணம் வேதனை அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். ரியல்எஸ்டே்ட் தொழில் செய்து வரும் இவர், கோவை மாவட்ட 76-வது வார்டில் திமுக துணை செயலாளராக உள்ளார். இவர் நேற்று காலை 11 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருடன், சேர்ந்து போரூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே கள்ளச்சதையில் மது வாங்கி அருந்தியுள்ளார்.

சிறிது நேரத்தில் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சண்முகத்தை இதனைத் தொடர்ந்து அவருடன் மது அருந்திய மற்றொரு திமுக பிரமுகரும் வாந்தி எடுத்துள்ளார். இதனால் இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். இதில் சண்முகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், மதுஅருந்தியதால் உயிரிழந்த திமுக பிரமுகரின் மரணம் வேதனை அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது!

அரசு மதுக்கடை குடிப்பகத்தில் வழங்கப்பட்ட மதுவை குடித்தவர் உயிரிழக்க காரணம் என்ன? மதுவில் கலப்படமா? கள்ள மது விற்பனை செய்யப்பட்டதா? டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகள் தரம் குறைந்தவையா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும்!

அரசு மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12 மணிக்குத் தான் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், குடிப்பகத்தில் காலை 11.30 மணிக்கே மது வழங்கப்பட்டது எப்படி? டாஸ்மாக், காவல்துறை இதை வேடிக்கை பார்க்கின்றனவா? இது தொடர்பாக யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

மது மனிதர்களைக் கொல்லும் நஞ்சு. அது சட்டப்பூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ விற்கப்படக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் படிப்படியாகவோ, ஒரே கட்டமாகவோ மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! என கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.