சாக்லெட்டால் பரவும் நோய் தொற்று: ஐரோப்பாவில்

லண்டன்-ஐரோப்பாவில், பெல்ஜியம் சாக்லெட் சாப்பிட்ட 151 குழந்தைகள், ‘சால்மோனெல்லா’ என்ற நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

. இதில் ஒன்பது குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்கள் உலக அளவில்பிரசித்தம் பெற்றவை. இந்தியா உட்பட, 113 நாடுகளுக்கு இந்த சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெல்ஜியம் சாக்லேட் வாயிலாக, ‘சால்மோனெல்லா’ எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில், இந்த சாக்லெட்டை சாப் பிட்ட150 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர பெல்ஜியம்,பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒன்பது குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.’சால்மோனெல்லா’ என்பது, ‘பாக்டீரியா’ தொற்று. இது விலங்குகளின் உடல்களில் காணப்படும். குறிப்பாக, பண்ணை கோழிகளிடம் இந்த பாக்டீரியா தென்படும். ‘டைப்பாய்டு’ காய்ச்சல் இந்த பாக்டீரியா வாயிலாக தான் ஏற்படுகிறது.நோய்த் தொற்று ஏற்பட்ட இரண்டு மணி நேரத்தில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் ஆபத்து இல்லை.பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இந்த நோய் தரமற்ற உணவு வாயிலாக பரவுகிறது. குறிப்பாக கெட்டுப்போன உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி வாயிலாக பரவுகிறது. தற்போது சாக்லேட் வாயிலாக இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.