சென்னை:
சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.
வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டொயட்டோ ஷோரூம் முன் “யூ திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.
செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயட்டோ ஷோரூம் முன் “யூ திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.
பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டொயட்டோவுக்கு முன்னால் “யூ திருப்பம்” திரும்பி அவர்களின் இலக்கை அடை யலாம்.
வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் இது சம்மந்தமாக ஆலோசனைகள் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வைக்கலாம்.