சென்னை: சென்னை ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு 171 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை புதிய வகை கொரோனா பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வடமாநிலங்களில் இருந்து சென்னை ஐஐடி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்குள்ள அனைவருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 1676 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஐஐடி கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐஐடியில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 171 ஆக அதிகரித்துள்ளது என்றவர், சென்னை ஐஐடியில் புதிய வகை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே உள்ள கொரோனா வகையால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை ஐஐடியில் நிலையில்,நாளைக்குள் சென்னை ஐஐடியில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதனால நாளை முதல் கொரோனாவால் குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கூறினார்.