நியூயார்க்,
உலகின் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக விமர்சனம் செய்து வந்த உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தின் 9.1 சதவீத பங்குகளை வாங்கினார்.
அதை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இந்த ஒப்பந்தம் இறுதியானது.
இந்த நிலையில் எலான் மஸ்க் தற்போது, டுவிட்டர் நிறுவனம் பொது நம்பிக்கையை பெறுவதற்காக, அரசியல் ரீதியில் நடுநிலையாக இருப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “டுவிட்டர் பொது நம்பிக்கைக்கு தகுதியானதாக இருக்க, அது அரசியல் ரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும். அரசியல் ரீதியில் நடுநிலை என்பது தீவிர வலதுசாரியையும் தீவிர இடதுசாரியையும் கவலையடைய செய்யும்” என்று பதிவிட்டுள்ளார்.
For Twitter to deserve public trust, it must be politically neutral, which effectively means upsetting the far right and the far left equally
— Elon Musk (@elonmusk) April 27, 2022