தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி, ‘
விருமன்
‘ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.
ஐஸ்வர்யா – ரோஹித்தின் திருமணம் மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டது. ரோஹித் புதுச்சேரி ரஞ்சி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவர்கள் திருமணத்தில் கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
இதனையடுத்து சென்னையில் வைத்து திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். அதன்படி வரும் மே 1-ம் தேதி ஐஸ்வர்யா – ரோஹித்தின் திருமண வரவேற்பு நடைப்பெறுவதாக கடந்த மாதமே திரையுலகினரை சந்தித்து, அழைப்பிதழ் கொடுத்தனர் ஷங்கரும், அவரது மனைவியும்.
நயன், சம்மு செம்ம.. விஜய் சேதுபதி மாஸ்: ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ட்விட்டர் விமர்சனம்.!
இந்நிலையில் தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக ஷங்கரிடம் இருந்து அனைவருக்கும் செய்தி வந்துள்ளதாம். இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்திருந்தாராம் ஷங்கர். இந்நிலையில் திடீரென மகளின் வரவேற்பு நிகழ்ச்சியை
ஷங்கர்
தள்ளி வைத்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் படங்கள விட நல்ல படங்கள் ஓடுது Beast -ஐ கலாய்தாரா உதயநிதி?