திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தனியார் நிதி நிறுவன ஏஜெண்டை கடத்திச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தும்பிகுளத்தை சேர்ந்த லோகநாதன், சுற்றுவட்டார மக்களை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்து பணம் வாங்கி கொடுக்கும் ஏஜெண்ட் தொழில் செய்துள்ளார். 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்த நிலையில் நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தப்பியதாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கம் போல் தன் நிறுவனத்தில் இருந்த லோகநாதனை, வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கெர் பொருத்திய காரில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிக்களை கொண்டு விசாரித்து வருகின்றனர்.