திருமண வயது 18 ஆக உயர்வு பிரிட்டனில் மசோதா நிறைவேற்றம்| Dinamalar

லண்டன் : பிரிட்டனில் ஆண், பெண் திருமண வயதை, 16 லிருந்து, 18 ஆக உயர்த்தும் மசோதா பார்லி.,யில் நிறைவேறியது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தற்போது, 16 மற்றும் 17 வயது ஆண்களும், பெண்களும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள அனுமதி உள்ளது.இந்நிலையில் கட்டாய திருமணம், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில், பிரிட்டன் பார்லி.,யில் பழமைவாத கட்சி எம்.பி., பாலின் லதம், திருமண வயதை உயர்த்தும் மசோதாவை தாக்கல் செய்தார். 11 மாதங்களுக்குப் பின் இந்த மசோதா நேற்று பிரிட்டன் பார்லி.,யில் நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து எலிசபெத் ராணி ஒப்புதலுடன் இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று அமலுக்கு வரும்.இதன்படி 18 வயதிற்குட்பட்ட திருமணங்கள் சட்ட மீறலாக கருதப்படும். பிரிட்டனைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் திருமண வயது உயர்த்தப்படும் என, தெரிகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.