திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு நூதன தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது அம்மாவட்ட நீதிமன்றம்.
நீதிமன்ற தீர்ப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அந்த 17 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமைதோறும் அரசு மருத்துவமனையில் வேலை செய்ய வேண்டும் என்று போக்சோ சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இவர், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்தச் சிறுவன் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணை நிறைவுபெற்றதைத் தொடர்ந்து நீதிபதி ராதிகா இன்று இந்த தீர்ப்பை அளித்தார்.
தீர்ப்பின்படி அவர் அந்தச் சிறுவன் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சுகாதாரத்துறையினர் கொடுக்கும் பணிகளை செய்திட வேண்டுமென நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை யாரும் செய்யக்கூடாது என்பதற்காக இந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்தி: நிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தூத்துக்குடியில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM