உக்ரைனில் டினிப்ரோவைச் சேர்ந்த 6 வயது சிறுமி தெருக்களில் புல்லாங்குழல் வாசித்து, அதன் மூலமாக பணம் சேர்த்து ரஷ்யர்களுக்கு எதிராக போராடும் உக்ரைனிய போராளிளுக்கு தன்னால் முடிந்த உதவி செய்கிறார்.
சோலோமியா ராய்ட் (Solomiia Reut), எனும் 6 வயது சிறுமி புல்லாங்குழல் வாசித்து உக்ரேனிய வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடைகளுக்கு பணம் சேகரிக்கிறார்.
ஏற்கெனவே இரண்டு நாட்கள் புல்லாங்குழல் வாசித்து, ஒரு கவச உடையை வாங்குவதற்கு அவர் பணம் சம்பாதித்துள்ள அவர், தேவைப்படும் வரை தொடர்ந்து பணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். அவர் சேகரித்த நிதியில் ஒரு குண்டு துளைக்காத ஆடையும் வாங்கப்பட்டது.
இரண்டு நாட்களில் உக்ரைன் பணமதிப்பில் கிட்டத்தட்ட 5,000 ஹ்ரிவ்னியாக்களை (165 அமெரிக்கா டொலர்) சேகரித்துள்ளார். பிறகு, அவரது அம்மாவிற்கு தெரிந்தவர்கள் மற்றும் நண்பர்கள் சில கொடுத்து உதவியுள்ளனர்.
தனது மகளின் யோசனைக்கு ஆதரவு அளித்த சோலோமியாவின் தாய் க்சேனியா ராய்ட் கூறுகையில், “உண்மையில், இது கல்வியின் ஒரு அங்கமாகும், இதனால் போர் வெகு தொலைவில் இல்லை என்பதை குழந்தை புரிந்துகொள்கிறது, ஆனால் இங்கு நடக்கும் போர் மற்றும் அது நம் வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கலாம்” என்று அவரது தாயார் கூறினார்.