தெற்கு அர்ஜென்டினாவில் கண்டெடுக்கப்பட்ட 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கத்தி போன்ற கூர் நகங்கள் உடைய டைனோசரின் புதை படிமங்கள் பியூனஸ் அயர்ஸில் உள்ள பெர்னார்டினோ ரிவாடாவியா இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சாண்டா க்ரூஸ் மாகாணத்தில் 2020-ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த டைனோசரின் தசைகள் மற்றும் தசைநார்கள் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அந்த டைனோசர் குறித்து நன்கு அறிந்து கொள்ள முடிந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மைக்ரோதோரக்ஸ் வகையை சேர்ந்த இந்த டைனோசர்கள் 10 மீட்டர் உயரம் வரையில் வளரக்கூடியது என்றும் 5 டன் எடை வரை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.