Actress Andrea Jermiah Refused to act nake in devil 2 Movie Andrea says the director forced me to refuse to act naked in devil 2 : தமிழ் சினிமாவில் சவாலான கேரக்டர்களை ஏற்று நடித்து பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு மனைவியாக அறிமுகமான இவர். தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, தரமணி என பல வித்தியாசமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் பாடகி. டப்பிங் கலைஞர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் ஆண்ட்ரியா தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு என்ற வித்தியாசமான பேய் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மிஷ்கின் ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பிசாசு 2 படம் குறித்து வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் படத்தின் மீதா எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன், பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி. உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில், நடிகை ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் சில காட்களில் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரில் ஆண்டரியா தண்ணீர் தொட்டிக்குள் ஆலை இல்லாமல் இருப்பது போன்று வெளியானது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் பிசாசு 2 படம் குறித்து பேசிய நடிகை ஆண்டரியா, பிசாசு 2 படத்தில் பேயாக நடித்துள்ளேன். இந்த படத்தின் கதையை கேட்டதும் 15 நிமிடங்கள் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். ஆனால் அப்போது எனக்கு இதில் உடன்பாடு இல்லை. பின்னர் கட்டாயப்படுத்தியதால் ஒப்புக்கொண்டேன். கதை தரமானதாக இருந்ததும் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் மிஷ்கின் ஆண்ட்ரிய நடித்துள்ள நிர்வாண கட்சிகள் முகம் சுளிக்கும் அளவிலோ அல்லது காம எண்ணம் தோன்றுகின்ற மாதிரியோ இருக்க கூடாது என்ற எண்ணத்துடன் கைாண்டுள்ளேன் என்று கூறியியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளின் வெளியாக உள்ள இந்த படத்தில் டீசர் வரும் ஏப்ரல் 29-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.