பதிலடி கொடுக்குமா கொல்கத்தா? – டெல்லியுடன் இன்று மீண்டும் மோதல்!

Delhi Capitals vs Kolkata Knight Riders IPL Match No. 41: 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறி வரும் கொல்கத்தா அணி விளையாடிய 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதேபோல், 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி 3 வெற்றி, 4 தோல்வியுடன் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கு ஒருசேர “க்ளிக்” செய்து ஆட தவறி வருகின்றனர். அந்த அணியில் ஒரு அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் மற்ற 7 ஆட்டங்களில் 20 ரன்களை கூட தாண்டவில்லை. தொடர்ந்து 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாத சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் தடுமாற்றமும் பெரும் பின்னடைவாக உள்ளது.

கேப்டன் ஸ்ரேயாஸ் (248 ரன்), ரஸ்செல் (227 ரன் மற்றும் 10 விக்கெட்) மட்டுமே ஓரளவு சோபிக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் வெளியே உட்காரவைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் இன்றைய ஆட்டத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே நடந்த தொடக்க லீக்கில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வி அடைந்த கொல்கத்தா அணி அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை, ஒரு ஆட்டத்தில் ஜெயித்தால் அடுத்த ஆட்டத்தில் தோல்வியடைந்து விடுகிறது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முந்தைய ஆட்டத்தில் அந்த அணி சர்ச்சைக்கு மத்தியில்15 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த பிரச்சனையை ஓரங்கட்டிவிட்டு இன்றைய ஆட்டத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் மிடில்- ஆடர் அவ்வப்போது சொதப்பி விடுகிறது. பந்து வீச்சிலும் இதே நிலையை வெளிப்படுத்தும் அந்த அணிக்கு இன்னும் முன்னேற்றம் தேவை. மொத்தத்தில் பலமும் பலவீனமும் கொண்ட இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் சுவாரஷ்யங்களுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

Indian Premier League, 2022Wankhede Stadium, Mumbai   28 April 2022

Delhi Capitals 

vs

Kolkata Knight Riders  

Match Yet To Begin ( Day – Match 41 ) Match begins at 19:30 IST (14:00 GMT)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.