பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் பேசியதற்குத் தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பிரதமரின் பேச்சு முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.