புடின் இறந்து போக வேண்டும்… உக்ரைனிய மூதாட்டி விருப்பம் !


புடின் இறந்துபோக வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடினுக்கு வீடியோ முலம் செய்தி அனுப்பியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரினால் லட்டக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் அவதி அடைந்து வரும் நிலையில், உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க்(Severodonetsk) பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலினால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லியுபோவ் பாவ்லிவ்னா(Lyubov Pavlivna) என்ற மூதாட்டி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் விரைவில் இறந்துப் போக வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் மருத்துவமனையின் படுக்கையில் படுத்து இருந்த லியுபோவ், புடின் இறந்து போக வேண்டும், மற்றும் அவருடன் சேர்ந்த அனைவரும் இங்கு அருகில் கூட இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் இங்கு அனைத்தையும் அழிக்கிறார்கள், அவர்கள் நமது இளைஞர்களை மட்டும் அழிக்கவில்லை, அவர்களது உறவுகளை அவர்களையே உக்ரைனுக்கு அனுப்பி வைத்து அவர்களையும் அழிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திக்கு: அணுஆயுதப் போர் உறுதி…நாம் அனைவரும் இறக்க போகிறோம்: ரஷ்ய அரசு தொலைக்காட்சி தலைவர் எச்சரிக்கை!

புடின் மற்றும் அவரை சுற்றி இருக்கும் அனைவரும் இறக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வீடியோவிற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்யவும்: https://news.sky.com/story/ukraine-russia-news-live-new-international-coalition-to-supply-ukraine-with-weapons-to-fight-putin-for-months-or-years-12541713?postid=3797163#liveblog-body



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.