பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் தீ பிடித்து எறிவது அதிர்ச்சியைக் கொடுத்தது.
எல்க்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எறியும் சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்த காரணத்தால் மத்திய அரசு முக்கியமான முடிவுகளையும், கட்டுப்பாடுகளையும் அவசரமாக விதிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.
3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை!
இந்த நிலையில் மத்திய அரசு எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முக்கியமான உத்தரவை வெளியிட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்கள்
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீ பிடித்து எறிந்தது குறித்து முழுமையாக ஆய்வு செய்து முடிவுகள் வரும் வரையில் புதிய வாகனங்களை அறிமுகம் செய்ய வேண்டாம் என எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.
புதிய வாகன அறிமுகத்திற்குத் தடை
எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விபத்துக்கள் குறித்து மத்திய சாலைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் உடன் நடத்திய கூட்டத்தில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாகனங்கள் திரும்பப் பெற்றல்
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தான் அனைத்து எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் தீ பிடித்த வாகனங்களின் பேட்ச் வாகனங்களை மக்களிடம் இருந்து திரும்பப் பெற்று ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளது.
நித்தின் கட்கரி
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நித்தின் கட்கரி உத்தரவின் படி ஓலா, ஒகினாவா, ப்யூர் EV ஆகிய 3 நிறுவனங்கள் மட்டும் சுமார் 7000 வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் வாகனங்களில் கோளாறு இருந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் படி மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது மட்டும் அல்லாமல் வாகனங்களை மொத்தமாகத் திரும்பப் பெறவும் உத்தரவிட முடியும்.
மக்கள் அச்சம்
இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகள் மட்டும் அல்லாமல் கார், பஸ், போன்றவற்றை அதிகளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர மத்திய மாநில அரசுகளும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் திட்டமிட்டு வரும் நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
New Electric vehicle launches will be halt until ev Bikes fire are investigated – Transport ministry
New Electric vehicle launches will be halt until ev Bikes fire are investigated – Transport ministry புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யத் தடை.. மத்திய அரசு திடீர் உத்தரவு..!