டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் பெரும் போராட்டத்திற்கும் பின்பு கைப்பற்றிய நிலையில், டிவிட்டர் – எலான் மஸ்க் மத்தியில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் முக்கியமான கண்டிஷன் வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் எலான் மஸ்க்-ம் சரி, டிவிட்டர் நிறுவனமும் சரி எந்தக் காரணத்திற்காகவும் பின் வாங்க முடியாத நெருக்கடிக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்-யிடம் தற்போது வெறும் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகை மட்டுமே உள்ளது. ஆனால் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் 44 பில்லியன் டாலர் வேண்டும்.
7600 கோடி ரூபாய் அபராதம்
டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்காகப் பணத்திற்காகத் திரட்ட போராடிக் கொண்டு இருக்கும் எலான் மஸ்க் 1 பில்லியன் டாலர் அதாவது சுமார் 7600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் கட்டுப்பாடு டிவிட்டர் – எலான் மஸ்க் ஒப்பந்தத்தில் உள்ளது.
புலி வால்
அதாவது இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க முடியாத பட்சத்தில் யார் தோல்வியைச் சந்தித்தாலும் 1 பில்லியன் டாலர் தொகையை அபராதமாகப் பிற தரப்பினருக்கும் செலுத்த வேண்டும். அதாவது எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் தொகையைச் செலுத்த முடியாமல் போனால் டிவிட்டருக்கு 1 பில்லியன் டாலர் அபராதம் செலுத்த வேண்டும், இதேபோல் டிவிட்டர் நிர்வாகம் 100 சதவீத பங்குகளை எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் அளிக்காவிட்டால் டிவிட்டர் எலான் மஸ்க்-கிற்கு அபராதம் செலுத்த வேண்டும்.
44 பில்லியன் டாலர்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்ற மொத்தம் 44 பில்லியன் டாலர் தொகையைத் திரட்ட வேண்டும். இதில் எலான் மஸ்க் தனது பங்கிற்கு 21 பில்லியன் டாலரை திரட்ட அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. மீதமுள்ள பணத்திற்கு முதலீட்டு நிறுவன கூட்டணியை நாடியுள்ளார்.
20% டெஸ்லா பங்குகள்
இதன் வாயிலாக எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் டெஸ்லா பங்குகளில் குறைந்தது 20 சதவீதம் விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும். இது கட்டாயம் டெஸ்லா நிறுவனத்தில் மஸ்க்-ன் ஆதிக்கத்தைக் குறைக்கும்.
டெஸ்லா பங்குகள்
எலான் மஸ்க் தன்னிடம் இருக்கும் 170 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளின் சிறு பகுதியை விற்பனை செய்து 12.5 பில்லியன் டாலர் நிதி திரட்ட உள்ளதாகவும், 13 பில்லியன் டாலர் தொகையைக் கடனாகப் பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு 240 பில்லியன் டாலர்.
Elon Musk’s Twitter deal: 1 billion dollar termination fee
Elon Musk’s Twitter deal: 1 billion dollar termination fee புலி வாலை பிடித்த எலான் மஸ்க்.. விட்டா அவ்வளவு தான் ரூ.7600 கோடி ஸ்வாகா..!