தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரைக் கிளை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகளின் துணையுடன் முறை கேடாக பல நபர்களுக்கு பட்டா மற்றம் செய்யப்பட்டது. இது குறித்து அதிமுக-வினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் ஒன்றிய செயலர் அன்னபிரகாஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அன்னபிரகாஷ் 30 நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி, தினமும் காலை கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.