உக்ரைன் மீதான போர் தொடங்கிய முதல் 2 மாதங்களில் ரஷ்ய எரிசக்தியை பெரியளவில் வாங்கிய நாடு ஜேர்மனி என சுயதீன ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.
எரிசக்தி மற்றும் சுத்தமான காற்று பற்றிய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை கணக்கீட்டின் படி, பிப்ரவரி 24ம் திகதி அன்று உக்ரைனை ரஷ்ய துருப்புகள் தாக்கிய நாள் முதல் எரிபொருள் ஏற்றுமதி மூலம் ரஷ்யா 52.6 பில்லியன் யூரோ வருமானம் ஈன்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து, குழாய்கள் வழியாக வாயு ஓட்டத்தை நிகழ்நேர கண்காணிப்பு தரவுகளை பயன்படுத்தியும் மற்றும் மாதாந்திர வர்த்தகத்தின் அடிப்படையிலும் இது மதிப்பிடப்பட்டுள்ளது.
கருங்கடலில் குவியும் ரஷ்ய போர்க்கப்பல்கள்! பிரித்தானியா எச்சரிக்கை
போரின் முதல் 2 மாதங்களில் எரிபொருள் விநியோகத்திற்காக ஜேர்மனி ரஷ்யாவிற்கு 9.1 பில்லியன் யூரோ செலுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மதிப்பிடு குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என தெரிவித்த ஜேர்மன் அரசாங்கம், அதன் தரப்பு புள்ளிவிவரங்களையும் தர மறுத்துள்ளது.