மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள துலே நகரை நோக்கி சென்ற காரில் ஆயுதம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரை விரட்டிச் சென்று ஷிர்பூர் பகுதியில் வழிமறித்தனர். பின்னர் காரை சோதனை செய்ததில் வாள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மொத்தம் 89 வாள்களை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
இவர்கள் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப் முகமது ஷபீக் (35), ஷேக் இலியாஸ் ஷேக் லத்தீப் (32), சையத் நைம் சையத் ரஹீம் (29), கபில் தபாதே (35) ஆகிய 4 பேரை கைது செய்ததாக துலே காவல் கண்காணிப்பாளர் பிரவின்குமார் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆயுதச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கோங்கிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்..
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் கட்டப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்