2022ம் ஆண்டில் 190 பங்குகள் மல்டிபேக்கர் வாய்ப்பினை கொடுத்துள்ளன. அதில் அதானி கிரீன் எனர்ஜியும் ஒன்று.
கடந்த நிதியாண்டில் அதானி குழும பங்குகள் பலவும் நல்ல லாபம் கொடுத்த பங்குகளாக இருந்தன. குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது.
3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை!
கெளதம் அதானியின் இப்பங்கானது சொத்து மதிப்பு அதிகரிக்க முக்கிய பங்கு வகித்துள்ளது. இது ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸில் 5வது இடத்திற்கு முன்னேற வழிவகுத்துள்ளது.
எவ்வளவு ஏற்றம்?
கடந்த 3 ஆண்டுகளில் அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 43 ரூபாயில் இருந்து, 2910 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது 6600 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.
இப்பங்கு விலையானது இன்று தொடக்கத்தி-ல் பங்குக்கு 66 ரூபாய் அதிகரித்து, 2910 ரூபாயாக உச்சம் தொட்டது.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
அதானி கிரீன் எனர்ஜி பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 2.48% அதிகரித்து, 2912.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2945.85 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2832.20 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3050 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 874.80 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 2.74% அதிகரித்து, 2918.15 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 2950 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2834.75 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3048 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 860.20 ரூபாயாகும்.
ஆறு மாத நிலவரம்
இப்பங்கின் விலையானது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 1930 ரூபாயில் இருந்து, 2910 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது 50 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1345 ரூபாயில் இருந்து 2910 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. கிட்டதட்ட 115 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதே கடந்த ஆறு மாதத்தில் 150 சதவீதம் ஏற்றம் கண்டு, 1147 ரூபாயில் இருந்து 2910 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
ஓராண்டு நிலவரம்
கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலையானது 1055 – 2910 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது சுமார் 170 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பங்கின் விலையானது 66 மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தத்தில் முதலீட்டாளர்களின் முதலீடு பல மடங்காக அதிகரித்திருக்கலாம்.
லட்சாதிபதி வாய்ப்பு
இப்பங்கினில் ஒரு மாதம் முன்பு 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாயாக அதிகரித்திருக்கலாம். இதே இந்த ஆண்டின் தொடக்கதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 2.15 லட்சம் ரூபாயாகும். இதே ஆறு மாதம் முன்பு முதலீடு செய்திருந்தால் தற்போது 2.50 லட்சம் ரூபாயாகும். இதே 1 வருடத்திற்கு முன்பு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு 2.70 லட்சம் ரூபாயாகும்.
1 லட்சம் டூ ரூ.67 லட்சம் எப்படி?
இதே மூன்று வருடத்திற்கு முன்பு பங்கு விலை 43 ரூபாய் என்று இருக்கும்போது 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 67 லட்சம் ரூபாயாகும். ஆக சில ஆண்டுகளிலேயே முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பினை இப்பங்கு கொடுத்துள்ளது.
Adani group share turns Rs1 lakh to Rs.67 lakh in 3 years
Adani group share turns Rs1 lakh to Rs.67 lakh in 3 years/ரூ.1 லட்சம் ரூ 67 லட்சம் எப்படி.. அதானி கொடுத்த சூப்பர் வாய்ப்பு.. நீங்க வாங்கியிருக்கீங்களா?