ரூ.3,000 கோடி மோசடி சீனாவுக்கு தொடர்பு அம்பலம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நொய்டா,-உத்தர பிரதேசத்தில், 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, ‘ஆன்லைன்’ வாயிலாக மோசடி செய்யப்பட்டுள்ளதும், இதில் சீன நாட்டினருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.

latest tamil news

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஆன்லைன் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் இழந்ததாக, சமீபத்தில் போலீசிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை துவக்கினர்.இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மன்ஸரூல் இஸ்லாம், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:பெரிய நிறுவனங்களில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாக கூறியும் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறியும், ஆன்லைன் வாயிலாக பண மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் தொடர்புடைய இஸ்லாம் என்பவரை, போலீசார் சமீபத்தில் நொய்டாவில் கைது செய்தனர். 3,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக, ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.

latest tamil news

அந்தப் பணத்தை, சீனா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம் நாடுகளில், ‘கிரிப்டோகரன்ஸி’ எனப்படும், டிஜிட்டல் கரன்சியாக வாயிலாக பரிவர்த்தனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.