#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: உலக நாடுகள் ரஷியாவை வெளியேற்ற உதவ வேண்டும்- பிரிட்டன் வெளியுறவு செயலாளர்

28.4.2022


21.00: உக்ரைன் புறநகர்ப் பகுதிகளில் ரஷியாவின் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த பகுதிகளில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ரஷியா ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், எந்த போர் நடந்தாலும் பொதுமக்கள் அதிக விலை கொடுக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
20.30: உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பாக ஜெர்மனி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 586 உறுப்பினர்களும், எதிராக 100 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
20.00:  ரஷிய பகுதி மீது எந்தவொரு தாக்குதல் நடத்தினாலும் கடுமையான ராணுவ பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது. 
16.00: உலக நாடுகள் ரஷியாவை உக்ரைனை விட்டு வெளியேற்ற உதவ வேண்டும் என பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் உக்ரைனுக்கு எதிரான வெற்றி ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் சொல்லமுடியாத துயரத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
06.40: உக்ரைன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் ஆர்.ரவீந்திரா பேசுகையில்,
மாஸ்கோ மற்றும் கீவ் உள்பட பிராந்தியத்தில் ஐ.நா பொதுச் செயலாளரின் தற்போதைய விஜயத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.
மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் வரைவு உள்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது என தெரிவித்தார்.
03.30: ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று ரஷியா சென்றார். அங்குவெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
இந்நிலையில், ரஷியா பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று உக்ரைன் சென்றடைந்தார். அதிபர்ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரியை சந்திக்க உள்ளார்.
00.45: உக்ரைன் போர் தொடர வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார்.
அதனால்தான் உக்ரைனுக்கு அவை உதவி வருகின்றன. இதன் வாயிலாக மூன்றாவது உலகப் போரை உக்ரைனும், மேற்கத்திய நாடுகளும் திணிக்கின்றன. அணு ஆயுத மோதலை உருவாக்க இந்த நாடுகள் தூண்டுகின்றன. எங்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.