டெல்லி: வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். வாட் வரி, நிலக்கரி, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என அனைத்துக்கும் மாநில அரசுகள் மீது பிரதமர் மோடி பழி சுமத்துகிறார். எரிபொருள் மீதான 68 சதவீதம் வரி ஒன்றிய அரசுக்கு தான் செல்கிறது; இருந்த போதிலும் பிரதமர் பொறுப்பை தட்டி கழிக்கிறார் என ராகுல் காந்தி காட்டமாக கூறியுள்ளார்.