'விக்ரம்' படத்திற்காக படக்குழு செய்த மாஸ் சம்பவம்: உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆண்டவர்.!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது
கமல்ஹாசன்
நடிப்பில் ‘
விக்ரம்
‘ படத்தை இயக்கி முடித்துள்ளார்
லோகேஷ் கனகராஜ்
. கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் ஜுன் மாதம் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். முதல் படத்திலே விமர்சனரீதியாக வரவேற்பை பெற்ற லோகேஷ், இரண்டாவது படமாக கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து உருவான இந்தப்படத்தில் ஒரு பாடல் கூட இடம்பெறவில்லை. லோகேஷின் தனித்துவமான இயக்கத்தில் வெளியான இந்தப்படம் மெஹா ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் தற்போது ‘விக்ரம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். கமல் படங்களை பார்த்தே நான் சினிமாவிற்கு வந்தேன் என வெளிப்படையாக கூறிய தீவிர ரசிகரான லோகேஷின் இயக்கத்தில் கமல் நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

டீசருக்கே இவ்வளவு மிரட்டலா..?: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மிஷ்கினின் ‘பிசாசு 2’..!

இந்தப்படத்தின் ப்ரமோஷனுக்காக கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ‘விக்ரம்’ படத்தின் புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் வரையப்பட்டுள்ளன. இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும்.என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை.

மூன்றாம்பிறை,மகாநதி,தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது என குறிப்பிட்டுள்ளார். ‘விக்ரம்’ படத்தின் டிரைலரை கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப்படம் ஜுன் 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கன் vs சுதீப் – ‘இந்தி’ குறித்து ட்விட்டரில் அனல் பறந்த விவாத போர்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.