தமிழகம் மற்றும் கேரளாவில் விளைச்சல் பாதிப்பால் மிளகு விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இடுக்கி, குமுளி மற்றும் தமிழகத்தில் கொல்லிமலை, ஊட்டி, ஏலகிரி, கொடைக்கானல் ,ஏற்காடு ஆகிய பகுதிகளில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. மிளகு சாகுபடி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் தமிழகம் மற்றும் கேரளாவில் மிளகு செடிகள் மழை நீரில் மூழ்கின.
இதனால் கடந்த ஆண்டைவிட மிளகு விளைச்சல் 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 50 முதல் 90 வரை விற்கப்பட்ட மிளகு இந்த ஆண்டு விளைச்சல் குறைவால் ரூபாய் 600 முதல் 650 வரை விற்கப்படுகிறது.
இந்நிலையில் விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.