கோவை மேற்கு தொடர்ச்சி மலையில வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வந்தனர். இந்த நிலையில் வெள்ளிங்கிரி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மழை ஓயும் வரை பக்தர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் மழை குறைந்ததும் பக்தர்கள் மழை ஏற அனுமதிக்கப்பட்டு மழை ஏற தொடங்கினர். தற்போது சித்ரா பவுர்ணமி மற்றும் சிவராத்திரி போன்ற திருவிழா காலங்கள் முடிவுற்றதாலும் வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்து ள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது திருவிழா காலங்கள் முடிவடைந்து விட்டது. மேலும் கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும்.
இதையடுத்து வரும் மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். பொது மக்களும், பக்தர்களும் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மலைக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்…
வேலையின்மை, அலுவலகத்தில் பிரச்சனை தீர பலன்தரும் பரிகாரம்