ஸ்லைடிங் நம்பர் பிளேட் – போலீசார் எச்சரிக்கை
ஸ்லைடிங் நம்பர் பிளேட் – பறிமுதல் – கைது
பைக் ரேஸ் உள்ளிட்டவற்றில் ஈடுபடுவோர் பயன்படுத்தும் ஸ்லைடிங் நம்பர் பிளேட் பறிமுதல்
நம்பர் பிளேட்டை மடக்கி வைத்து மறைக்கும் முறைக்கு ஸ்லைடிங் நம்பர் பிளேட் ஆகும்
“சென்னை பைக்கர்ஸ்”, “நியூ மெகா ஸ்டிக்கர்ஸ்” ஆகிய கடைகளில் ஸ்லைடிங் நம்பர் பிளேட் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிப்பு
சென்னை போக்குவரத்து காவல்துறையினரின் வாகனத் தணிக்கையின் போது ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகள் கண்டறியப்பட்டன
இதனைத் தொடர்ந்து, ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்கும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கடைகளில் சோதனை நடத்தி 32 ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமாக போக்குவரத்து விதிகளை மீறி ஸ்லைடிங் நம்பர் பிளேட்டுகளை விற்பனை செய்ததாக கடை உரிமையாளர்கள் கைது
“சென்னை பைக்கர்ஸ்”, “நியூ மெகா ஸ்டிக்கர்ஸ்” ஆகிய கடைகளின் உரிமையாளர்களான பிரவீன்குமார், சரத்குமார் ஆகியோர் கைது