வரும் ஜூன் மாதத்தில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நடைபெற வாய்ப்புள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், காலக்கெடுவின்படி தொலைத்தொடர்புத்துறை செயல்பட்டு வருவதாகவும், அலைக்கற்றை விலை தொடர்பான தொழில்துறையினரின் கவலைகளைத் தீர்ப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறினார்.
ஏலம் தொடர்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளை டிஜிட்டல் தொடர்புகள் ஆணையம் பரிசீலிப்பதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
அலைக்கற்றைக்கான விலை அதிகமாக உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்ததால், டிராய் அமைப்பு 39 சதவீதம் வரை விலையை குறைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.