இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கோயர் தமிழகத்தின் பல இடங்களில் பிரம்மாண்ட தொழிற்பூங்கா திட்டத்தினை திட்டமிட்டுள்ளது.
3 லாபகரமான ஆட்டோமொபைல் பங்குகள்.. வாங்கி வைக்கலாம்.. நிபுணர்களின் செம பரிந்துரை!
முதல் கட்டமாக அரக்கோணத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தொழிற் பூங்காவை திட்டமிட்டுள்ளது.
முந்தைய வாடிக்கையாளர்கள்
ஏற்கனவே 1000 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை பல நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக சியட், ஜேகே டயர்ஸ், எல்கி, முருகப்பா, CGI, அசெண்டாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாகும்.
ஜி ஸ்கொயர் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஈஷ்வர், G Square Industrial Estate என்பது தொழில் துறை சார்ந்த ர்திட்டமாகும். இது எங்களின் லட்சிய திட்டம்.
400 ஏக்கர் திட்டம்
பெரிய நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்கும்பொருட்டு அரக்கோணத்தை மையமாகக் கொண்ட இந்த திட்டம், 400 ஏக்கர் பரப்பளவினைக் கொண்டது. தொழில் துறை பயன்பட்டிற்கு தேவையான பெரிய அளவிலான நிலங்களை உள்ளடக்கிய ஒரே பூங்கா இதுவாகும். 20 ஏக்கர் முதல் 100 ஏக்கர் அளவில் நிலம் வாங்குபவர்களிக்கு பல தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
எதற்கு பெஸ்ட்
இந்த ப்ளாட்கள் வேலை செய்ய தயாராக உள்ளன. அதனை வாங்கிய உடனே வேலை செய்யத் தொடங்கலாம். இந்த இடங்களை வணிக பயன்பாட்டிற்காக நாங்கள் மலிவு விலையில் வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இடத்திற்கு அருகிலேயே ரயில்வே வசதியும் உண்டு. இது சிமெண்ட், இரும்பு ஆலை, லாகிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும்.
தொழிலாளர்களுக்கும் பிரச்சனை இருக்காது
அரக்கோணம், திருவள்ளூர், ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால், தொழிலாளர்களுக்கும் பஞ்சமிருக்காது. அவசர காலத்திற்கு உதவும் வகையில் ஹெலிபேட் வசதியும் உள்ளது. மேலும் துணை மின் நிலையங்கள், போதுமான நிலத்தடி நீர் போன்ற பல அம்சங்களும் உள்ளன.
பிரச்சனை என்ன?
குறிப்பாக இந்த ஜி ஸ்கொயர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இரும்பு தொழிலில் உள்ளவர்களுக்கு இன்னும் நல்ல வாய்ப்பாக இருக்கும். மற்ற இடங்களில் இடங்களுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் இருக்கும். ஆனால் இதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மொத்தத்தில் தொழிலதிபர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
விலை எப்படியிருக்கும்
இந்த தொழில் பூங்காவில் விலை ஏக்கர் சுமார் 1.5 கோடி ரூபாய் ஆக இருக்கலாம். இது ஜிஎஸ்டி ரோடு, ஸ்ரீ பெரும்புதூரில் ஒப்பிடும்போது 3 கோடி ரூபாய் ஆக உள்ளது. மொத்தத்தில் இந்த ஜி ஸ்கொயர் பார்க் 500 – 600 கோடி ரூபாய் முதலீட்டினை ஈர்க்கலாம்.
விரிவாக்கம்
ஜி ஸ்கொயர் அரக்கோணம் மட்டும் அல்ல, அடுத்தபடியாக திருச்சி, கோயமுத்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
G-Square Group launches 400 acre industrial park at Arakkonam
G-Square Group launches 400 acre industrial park at Arakkonam/அரக்கோணம், திருச்சி, கோவையில் தொழிற்பூங்கா.. தமிழகத்தில் ஜி ஸ்கொயரின் பிரம்மாண்ட திட்டம்.. !