சேகர் கம்முலா
இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான லீடர் படம் மூலம் நடிகரானார் ராணா. அந்த படத்தில் தன் தந்தை இறந்துபோகவே ராணா முதல்வராவார். லீடர் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
இதையடுத்து அரசியல் கதைகளை படமாக்குவதை நிறுத்தினார் சேகர் கம்முலா. இந்நிலையில் மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறார்.
லீடர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாக அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார் சேகர் கம்முலா. அந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க விரும்புகிறார்.
இருப்பினும் முதலில் தனுஷை நடிக்க வைக்க முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில்
தனுஷ்
நடிப்பார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் ஸ்க்ரிப்ட் தயாராக இல்லாததால் தனுஷ் பிற படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
தனுஷை சந்தித்து
லீடர் 2
படத்தின் கதையை விரைவில் சொல்வார் சேகர் கம்முலா என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் கதையில் தனுஷ் ஏற்கனவே நடித்திருக்கிறார். ஆனால் மாநில முதல்வராக நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆத்தி, ஐஸ்வர்யா குடிக்கும் அரை லிட்டர் வாட்டர் பாட்டல் இவ்ளோ காஸ்ட்லியா!